வரும் ஜூன் 8ம் தேதி மதுரை ஒத்தக்கடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்திற்கான பூமி பூஜை மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வெயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப காற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் முகத்தையும், தலையையும் துணியால் மூடியபடி சாலையில் சென்றனர்.
மஹாராஷ்டிராவின் மும்பை-புனே அதிவிரைவு சாலையில் செங்குத்தான மலைப்பகுதி அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளை தவிர்த்து புனேவுக்கு விரைவாக செல்ல 13.3 கிமீ தூரத்துக்கு மிஸ்ஸிங் லிங் சாலை அமைக்கப்பட்டது. இதை அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் திறந்து வைத்தார்.
திருப்பூர் அடுத்த பெருமநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் சித்ரா பௌர்ணமி தேர்த்திருவிழா நடந்தது. இதில் பவளக்கொடி கும்மி கலைக்குழு அறக்கட்டளை சார்பில் கம்பத்தாட்டம் நடந்தது.