திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால் குட திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள். பக்தர்கள் கொண்டு வந்த பால் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது .
புதுச்சேரியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான தாகூர் கல்லூரி மைதானத்தை மாநில பா.ஜ.,தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டனர்.
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் 60 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வந்த எல் வடிவ மேம்பாலம் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது இன்னும் சில வாரங்களில் திறக்கப்பட உள்ளது.இடம் : அடையாறு
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.