உடுமலை அரசு கலைக் கல்லூரியில் தமிழ் பாடப்பிரிவில் புதிதாக சேருவதற்காக நடக்கும் இறுதி கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்காக வரிசையில் நிற்கும் மாணவியர்கள் .
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, வீதி உலா வரும் விநாயகர் தேரை தீயணைப்புத் துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.
சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், நடந்த பேரணியில், விழிப்புணர்வு பதாகை உடன் மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.