மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவுவதால், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள், இந்திய விமானப்படையின் சி-17 விமானம் வாயிலாக மீட்கப்பட்டு வருகின்றனர். எகிப்து மற்றும் ஜோர்டான் வழியாக நேற்று தாயகம் திரும்பியவர்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த பாய்மரப் படகு போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற படகுகள்.
ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையர்-வீரர்கள் தேசியக்கொடியை பிடித்தபடி வெற்றியை கொண்டாடினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு அசாம் மாநிலத்தில் இருந்து பிஜிலி என்ற 5 வயது பெண் யானை வந்தது. மடத்தில் உள்ள மையத்தில் யானை பராமரிக்கப்படும் என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அனந்த் சதுர்தசி தினத்தில் விநாயகர் விசர்ஜனம் எனப்படும் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்தது. அதில் வண்ணப்பொடிகள் தூவி கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை.
புதுச்சேரி உள்ளாட்சித் துறை தூய்மை பாரத இயக்கம்-நகர்ப்புறம் 2.0 திட்டத்தின் கீழ் கம்பன் கலை யரங்க வளாகத்தில் கல்லூரி மாணவிகளுக்கான கோலப்போட்டி நடந்தது.