உள்ளடக்கத்திற்கு செல்ல யார் கண்பட்டதோ, காஷ்மீரில் வறட்சி...: மலைப்பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் விரைவாக உருகுவதாலும், நீர்வளம் குறைந்துள்ளதாலும், 'குளுகுளு' காஷ்மீரில் வெப்பம் அதிகரித்து பல விவசாய நிலங்கள் வறண்டுவிட்டன. ஸ்ரீநகர், செக்தரா பகுதியில் ஒரு விவசாயி, தன் வறண்ட நிலத்தை வேதனையோடு பார்வையிட்டார். 2/
எந்த சுமையா இருந்தாலும் என் மகள் சுமைதான் எனக்கு சுகமான சுமை என்கிறாரோ இந்த தாய். இடம்: புதுச்சேரி பாரதி வீதி 3/
புதுச்சேரிக்கு வந்த லண்டன் நாட்டு சுற்றுலா பயணிகள் ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து ஆச்சரியமாக படம் பிடித்து மகிழ்ந்தனர். 4/
பொள்ளாச்சி பகுதிகளில் காலை நேரத்தில் பனி அதிகரித்து இயற்கையின் ஓவியமாய் பிரதிபலிக்கிறது. 5/
புதுச்சேரி முத்தியால்பேட்டை கணபதி நகர் பெரியநாயகி சமேத உடனுறை பெரியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. 6/
கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்கு ஜரூராக நடைபெற்றது. 7/
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் திருப்பணி நடந்து வரும் நவ நரசிம்ம பெருமாள் கோவிலில் கொடிமரம் அமைத்து சிறப்பு பூஜை நடந்தது. 8/
திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா மகாதீபத்தில் திரியாக பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடாத்துணி 3ம் பிரகாரத்தை சுற்றி கொண்டு வரப்பட்டது. 9/
திருவண்ணாமலை தீபத்திருவிழா 8ம் நாள் காலை உற்சவத்தில், குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி மாட வீதி உலா வந்தார். 10/
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது.
மேலும் undefined
மேலும் undefined