கழிவுகளால் காசிமேடில் சுற்றுச்சூழல் பாதிப்பு: காசிமேடு பகுதியில் கழிவுநீர், பிளாஸ்டிக் கழிவுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட கழிவுகள் கடலில் கலப்பதால், கடல்வாழ் உயிரினங்களும் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கடல் வளத்தை காக்க அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.