புது கமிஷனருக்கு அல்வா: திருநெல்வேலி மாநகராட்சி புதிய கமிஷனராக பொறுப்பேற்ற மோனிகா ரானாவுக்கு, நெல்லையின் அடையாளமான அல்வாவை கொடுத்து வரவேற்றார் மேயர் ராமகிருஷ்ணன். இதே ‛அல்வா'வை மாநகராட்சி பணிகளிலும், டெண்டரிலும், கமிஷனருக்கு கொடுக்காமல் இருந்தால் சரி!
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.