மின்விளக்கு கம்பங்களில் சோலார் பேனல்கள் பேட்டரிகள் மாயமாகி பறவைகள் கூடு கட்டி வருகின்றன. இதனால் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரிக்குமோ என மனோபுரம் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இடம்: பொன்னேரி.
மேட்டூர் அணை நீர்மட்டம், 74 (முழு கொள்ளவு 120 அடி)அடியாக குறைந்ததால், சேத்துக்குழி நீர்பரப்பு பகுதியில் மூழ்கியிருந்த, புனித சவேரியார் ஆலய கோபுர முகப்பு, 6 அடி அளவில், நீருக்கு வெளியே தெரிந்தது
அசாம் மாநிலம் கோலாகாட்டில் உள்ள காசிரங்கா புலிகள் காப்பகம் பருவமழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் பின் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக நேற்று முதல் திறக்கப்பட்டது.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க.,செயலாளர் டாக்டர் லட்சுமணன் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு விழுப்புரம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் டி.கே.பி.ரமேஷ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.