தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் நிகழ்ச்சி நடந்தது. இதில் (இடமிருந்து) கற்பகம் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு தலைவர் ஆதி பாண்டியன், சேரன் குரூப் ஆப் இன்ஸ்டியூசன்ஸ் நிர்வாக இயக்குனர் சினேகா ஶ்ரீதர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் ரமேஷ், ஈஸ்வர் இன்ஜி., கல்லூரி டீன் கருப்பசாமி, கற்பகம் அகாடமி ஆப் ஹையர் எஜுகேசன் இயக்குனர் பாலாஜி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
திருவள்ளூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று நடந்த மகளிர்க்கு இலவச வெற்றி பயணம் திட்டத்தினை வழித்தடம் 97 திருத்தணிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து பயணம் செய்தார்
பா.ம.க.வின் பசுமை தாயகம் அமைப்பின் 'மது இல்லா தமிழகம்' எனும் விழிப்புணர்வு இயக்கத்தை, பா.ம.க., சட்டசபை குழு தலைவர் சவுமியா தொடங்கி வைத்து, விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார்.
நெரிசல்:காந்தி ஜெயந்தி தொடர்ந்து விடுமுறை என்பதால் சொந்த ஊருக்குத் திரும்பவும் பொதுமக்களால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல். இடம் :பெருங்களத்தூர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரியமங்கலம் கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், வி.பி.ஜி., ராம்ஜி திட்டத்தின் கீழ் புதிய சமுதாய குளம் அமைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.