பவானியம்மன் கோவிலில் பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சி கருவியின் செயல்பாட்டை துவக்கி வைத்த கலெக்டர் பிரதாப் தரிசனம் செய்ய வந்த குழந்தையிடம் மஞ்சப்பையை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இடம்: பெரிய பாளையம்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.