தமிழக பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் என குழந்தைகள் தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்கியது அமலுக்கு வந்த நிலையில் சென்னை லேடி வில்லிங்டன் பள்ளியில் தண்ணீர் குடிக்கும் பள்ளிக் குழந்தைகள்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, வீதி உலா வரும் விநாயகர் தேரை தீயணைப்புத் துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.
சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், நடந்த பேரணியில், விழிப்புணர்வு பதாகை உடன் மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.