சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணத் தொகையை ரூ. 10 லட்சமாக உயர்த்தி தரவேண்டும் என உறவினர்கள் உடலை வாங்க மறுத்து விருதுநகர் அரசு மருத்துவமனை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.