இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
ஈரான் ஏவிய ஏவுகணை ஒன்றை இஸ்ரேல் இடைமறித்து அழித்தது. இதன் பெரிய சிதறல் மேற்கு கரையின் பெடுயல் குடியிருப்பு பகுதியில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் விழுந்து கிடந்தது. அதை ஆச்சரியமுடன் பார்த்த குழந்தைகள்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களின் நேர்காணல் முடிவடைந்த நிலையில், தொகுதிகள் ஓட்டு சேகரிக்க தலையில் உதயசூரியன் தொப்பி அணிந்து புறப்பட்ட திமுக தொண்டர் வடிவேல்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர் உடனுறை கற்பகாம்பாள்.