சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாளில் கருட வாகனத்தில் நரசிம்ம ஸ்வாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக களிமண்ணால் செய்யப்பட்ட லட்சுமி சிலையை வாங்கி சென்ற இளம்பெண். இடம்: நாடியா, மேற்குவங்கம்.
காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சியில், மழை நீர் வடிகால்வாயில் செடிகள் வளர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்தது. நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக வடிகால்வாய் சீரமைக்கப்பட்டு உள்ளது.
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளுக்கு எனக் கூறி, அதிக பரப்பு மற்றும் ஆழத்தில் மண் எடுக்கப்பட்டடுள்ளதால் பிரம்மாண்ட பள்ளங்கள் ஏற்பட்டுள்ள காஞ்சிபுரம் உள்ளாவூர் சிற்றேரி.