கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் எதிரே, சித்தராஜகண்டிகை கிராமத்திற்கு செல்லும் சாலையின் ஆபத்தான வளைவு பகுதிகளில் தடுப்பு மற்றும் அறிவிப்பு பலகை இல்லாததால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணித்து வருகின்றனர்.
மலப்புரத்திலிருந்து கேரள அரசு பஸ்சில் கடத்தப்பட்ட ரூ.62 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை செல்வபுரத்தை சேர்ந்த நாகராஜை கேரளா போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டு சாதனைகளை விளக்கும் குறும்படம் அடங்கி எல்.இ.டி. திரையில் திரையிடுவதை சென்னை மெரினா காமராஜ் சாலை உழைப்பாளர் சிலை அருகே நேரில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. இடம்: எழும்பூர், சென்னை
மின்வாரிய இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகள் ஊதிய உயர்வை வலியுறுத்தி சென்னை அண்ணாசாலை தலைமை மின்வாரிய அலுவலகம் நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.