முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுக்கு, திருத்தணியில் மணிமண்டபம் மற்றும் திருவுருவச்சிலை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் கலெக்டர் பிரதாப், எம்.எல்.ஏ.,சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இடம்: திருத்தணி
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போலே.
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.