அரியாங்குப்பம் மனவெளி ராதா ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் தினமலர் பட்டம் மாணவர் இதழை பள்ளி முதல்வர் பெர்லின் ஜெயக்குமார், ஆசிரியர் மாலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினர்.
ராமாயணத்தில் ராமர் நடந்த பாதையை நினைவு கூரும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறை அயோத்தியில் இருந்து 42 கி.மீ., தூரத்துக்கு ஒரு நாள் புனித யாத்திரை நடக்கும். யாத்திரையில், ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டபடி பக்தி பரவசத்துடன் சென்ற பக்தர்கள்.
கேரள மாநிலம் இடுக்கி அணையின் ஒரு பகுதியான செருதோணி அணையில், ஒரு புறம் தண்ணீரும், அதற்கு ஏற்ப மறுபுறம் மேகங்கள் சூழ்ந்தும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.