காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வெளிபிரகார கருங்கல் தரை, வெயிலுக்கு சுட்டெரித்ததால், பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் ஓடினர். பிரகாரத்தில், மிதியடி அமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.