சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் 556வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள குருத்வாராவில் வழிபடுவதற்காக குவிந்த சீக்கியர்கள்.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் மணிலாவில் நடைபெற்ற 'மிஸ் எர்த்' என்கிற சுற்றுச்சூழல் உலக அழகி போட்டியில் வென்ற, செக் குடியரசைச் சேர்ந்த நாடலி புஷ்கினோவாவை வாழ்த்திய சக போட்டியாளர்கள்.
அமெரிக்காவில் அரசு செலவினங்களுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காததால், நிதி முடக்கம் ஏற்பட்டு பலருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இடம்: ஆஸ்டின், டெக்சாஸ் மாகாணம்.
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகர் ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மூலவர் ரத்தினகிரீஸ்வரர். திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், அன்னாபிஷேக அலங்காரத்தில் ஆகாச லிங்கம்.