புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் 54ஆம் ஆண்டு திருபவித்ரோத்சவ விழாவை முன்னிட்டு சுவாமி தங்க கருட சேவையில் அருள் பாலித்தார்.
பீஹாரின் புத்த கயாவில் உள்ள மகாபோதி புத்த விஹாரில் மழைக்காலம் நிறைவடைவதை குறிக்கும் வகையில் நடைபெற்ற 'கதினா' வழிபாட்டில் பங்கேற்ற தாய்லாந்து பக்தர்கள்.
ராஜஸ்தானின் புஷ்கரில் நடந்து வரும் ஒட்டகத் திருவிழாவில் பார்வையாளர்களை கவரும் விதத்தில் பல வினோதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. பெரிய மீசைக்கான போட்டியில் பங்கேற்றவர்களுடன் பார்வையாளராக வந்த வெளிநாட்டு பெண்.
பீஹாரில் முதற்கட்ட சட்டசபை தேர்தல் வரும் 6 ல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சியினர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அங்குள்ள காந்தி மைதானதை வாகன நிறுத்துமிடமாக போக்குவரத்து போலீசார் மாற்றியுள்ளனர். இடம்: பாட்னா.
திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, கட்சி ஏஜன்டுகளுக்கான பயிற்சி கூட்டம், டவுன்ஹால் மாநாட்டு அரங்கில் நடந்தது.
கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து, செஞ்சிலுவை சங்கம் அருகே பா.ஜ., கட்சி சார்பில் தீ பந்தம் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.