சத்தீஸ்கர் மாநில வனத்துறை அமைச்சர் கேதர் காஷ்யப், தன் குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் வந்தார். காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில்களில், குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.