இன்றைய போட்டோ

மக்காச்சோளத்திற்கு கூடும் மவுசு: மக்காச்சோளம் என்பது உணவு/ தீவனம், எரிபொருள் மற்றும் தொழில் என நான்கு துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது முழுமையான பொருளாதார பயிராக கருதப்படுகிறது. எத்தனால் போன்ற எரிபொருள் உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக நாட்டின் பிற மாநிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயிகள் காலம் காலமாக லாபம் பார்த்து வருகின்றனர். இப்போது தமிழக விவசாயிகளும் பரவலாக மக்காச்சோளம் பயிரிட்டு பலன் பெற்று வருகின்றனர். இங்கே அமோகமாக விளைந்த மக்காச் சோளத்தை மகிழ்ச்சியுடன் உலரவைத்த விவசாயி. இடம்:கொள்ளக்குடி கிராமம். திருவண்ணாமலை.
16-Jul-2025
இன்றைய போட்டோ06-Oct-2026

2/

3/
இன்றைய போட்டோ05-Oct-2026

4/

5/

6/
சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே எம்.செட்டிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவ – மாணவியர் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை உள்ளது. பள்ளிக்கல்வி துறைக்கு பல ஆயிரம் கோடிகளை தமிழக அரசு கொட்டி கொடுத்தாலும், இந்த மரத்தடி வகுப்பறை கலாசாரத்திற்கு எப்போது தான் முற்றுப்புள்ளி என்பதே பெற்றோரின் கேள்வி!
05-Oct-2026

7/

8/

9/
இந்தோனேசியாவின் போர்னியோ மற்றும் சுமத்ரா காடுகளில் மட்டுமே காணப்படக்கூடிய ஐந்து ஒராங்குட்டான் குட்டிகள், சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பலால் கடத்தி வரப்பட்டு, அதிகாரிகளுக்குப் பயந்து ஒடிசா மாநிலம் பாலசோர் வனப்பகுதியில் கைவிடப்பட்டன.கடந்த மாதம் வனத்துறையினரால் மீட்கப்பட்ட இந்த இளம் குட்டிகள், தாயின் அன்போடும் அரவணைப்போடும் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வந்ததால் தற்போது மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் உள்ளன. அதில் இரண்டு குட்டிகள் நேற்று கம்பளத்திலும் ஹாயாகப் படுத்திருந்தன.
05-Oct-2026
10/

