புதுச்சேரியில் நடந்த பழங்கால பாறை ஓவியங்களை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சியில் ஓவியர் முனுசாமியின் ஓவியங்களை மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் அதிபரும், அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலருமான டோ லாம், 3 நாள் அரசு முறை பயணமாக டில்லி வந்தார். அவரை நம் வெளியுறவுத்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் வரவேற்றார்.
தமிழகத்தில் புதிய அரசு அமைய உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறைகளை சுத்தம் செய்து, அங்கு இருந்த படங்கள் உள்ளிட்ட பொருட்களை அகற்றும் பணி மும்முரமாக நடந்தது.
தவெக தலைவர் விஜய், அவரது கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு காரில் வந்த போது, சாலையின் இருபக்கதிலும் போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு இருந்தனர். இடம்: பனையூர், சென்னை.
கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வெயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப காற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் முகத்தையும், தலையையும் துணியால் மூடியபடி சாலையில் சென்றனர்.
மஹாராஷ்டிராவின் மும்பை-புனே அதிவிரைவு சாலையில் செங்குத்தான மலைப்பகுதி அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளை தவிர்த்து புனேவுக்கு விரைவாக செல்ல 13.3 கிமீ தூரத்துக்கு மிஸ்ஸிங் லிங் சாலை அமைக்கப்பட்டது. இதை அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் திறந்து வைத்தார்.