விண்ணில் தவழும் மேகங்கள் மண்ணிற்கு இடம்மாறியதோ என எண்ணும் வகையில், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நிலவி வரும் கடும் பனி மூட்டத்துக்கு இடையே கங்கை நதியின் மீதுள்ள பாலத்தில் ஊர்ந்து சென்ற ரயில்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த உங்கள் ராணுவத்தை அறிந்து கொள்ளுங்கள் கண்காட்சியின் போது, போர் மற்றும் தற்காப்பு கலைத் திறன்களை நம் ராணுவ வீரர்கள் வெளிப்படுத்தினர். அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகளின் அணிவகுப்பு பொது மக்களைக் கவர்ந்தது.
அரசாணைப்படி அலுவலகங்களில் அண்ணா மற்றும் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் படத்தை வைக்கக் கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்.
சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான மக்கள் வருவதையொட்டி மணல் பகுதியில் மர குச்சிகளால் செய்யப்பட்ட யானை உருவம் வைக்கப்பட்டுள்ளது. காண்போரை கவரும் வண்ணம் உள்ளது.