ஆசிய இளையோர் கபடி போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் அபினேஷூக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 1 லட்சம் ரூபாய் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அருகில் அபினேஷின் தாய் தன லட்சுமி, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ். இடம்: சென்னை.
தென்காசியில் நடந்த அரசு விழாவிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலினை கழுநீர் குளம் என்ற இடத்தில் சிலம்பம் சுழற்றி சிறுவர்கள் வரவேற்றனர். அவர்களுடன் சேர்ந்து, தானும் சிலம்பம் சுற்றி மகிழ்ந்தார் ஸ்டாலின்.
காஞ்சி, கோவிந்தவாடி ஏரி நிரம்பியதால், நாணல் புற்கள் மூழ்கியது. உயர்மின் கோபுர மின் கம்பங்களில் குஞ்சு பொரித்து வரும் நீர்க்கோழிகள். பிள்ளையைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதற்குள் எந்த தாய்க்கும் சிரமம் தான். 2வது படம்; தண்ணீரில் மூழ்குவதற்கு முன் காணப்பட்ட நாணல்.
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் விவசாயிகள் இயந்திர நடவுக்காக நாற்றுபாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.