அதிக காற்று, சாரல் மழை, வெயில் என சீரற்ற வானிலை நிலவுவதாலும் விடுமுறை தினங்கள் இல்லாததாலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால் பிரையன்ட் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.