திருப்பூர், சண்முகானந்த சங்கீத சபா சார்பில் 19ம் ஆண்டு இசை அமுதம் நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் திரைப்பட பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம் குழுவினர் பாடல் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் கலை சங்கமம் நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்த அஜந்தா கலைக்குழுவினர்களின் கலை நிகழ்ச்சி. இடம்: காந்தி பார்க் பூங்கா, கோவை.
சென்னை மயிலாப்பூர் ஆதி கேசவ பெருமாள் பேயாழ்வார் கோவிலில் தை மாத தெப்பத் திருவிழா துவங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறும். பெருமாள் தெப்பத்தில் குளத்தில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் மெரினா கடற்கரையில் திருக்குறள் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாக கொண்டு இசை நிகழ்ச்சி நடந்தது.