ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று நடக்கும் தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இருந்து திருச்சி தினமலர் பதிப்பு ஆசிரியர் ராமசுப்பு மனைவி ரேணுகா(வலமிருந்து 5வது), மகள்கள் திருச்சி தினமலர் பதிப்பு இணை ஆசிரியர் அபர்ணா (வலமிருந்து 6), சுசூகி ஷோரூம் நிர்வாகி கிருஷ்ணபிரியா (வலமிருந்து 7), அர்ச்சகர்கள் கொண்டு வந்த சீர் வரிசையை கோவில் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் பெற்றுக் கொண்டார்
ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் கைதான மகேந்திர சிம்ஹன் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க , சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் போக்சோ நீதிமன்றம் அழைத்து வந்தனர். இடம்: சென்னை உயர் நீதிமன்றம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு சந்தனம் அபிஷேகம் நடந்தது.
முழு வீச்சு!மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில் மணப்பாக்கம் அருகே மெட்ரோ மேம்பாலத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : மணப்பாக்கம்
குளிர்பான விளம்பர பலகை முன் ஹாயாக அமர்ந்து விளம்பர மாடல் மங்கைக்கே டப் கொடுத்த மங்கியாரின் சேட்டை... அந்த நொடியில் நம் புகைப்பட கலைஞரின் கேமராவுக்கு நல்ல வேட்டை!. இடம்: உடுமலை, திருப்பூர்.