மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கிராமப்புறங்களில் குளம் குட்டைகள் நிரம்பியுள்ளன. காரமடை சீலியூர் அருகே உள்ள குட்டையில் நீர் நிரம்பியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை, இடுவாய் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கால்நடைகளுடன் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு பிறகு பசுமைக்கு மாறிய வனம் சூழ்ந்த, மலைகளின் நடுவே அருவியில் வரும் வெள்ளம் வெள்ளி கீற்றாக காட்சியளிப்பது, சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. இடம்: குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதை எதிரே உள்ள பகாசூரன் மலை.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் அரசு கொள்முதல் செய்து அடுக்கி வைத்துள்ள பல நெல் மூட்டைகள் நனைந்து முளைப்பு ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளதை, புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் ஆய்வு செய்தார்.
ராமாயணத்தில் ராமர் நடந்த பாதையை நினைவு கூரும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறை அயோத்தியில் இருந்து 42 கி.மீ., தூரத்துக்கு ஒரு நாள் புனித யாத்திரை நடக்கும். யாத்திரையில், ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டபடி பக்தி பரவசத்துடன் சென்ற பக்தர்கள்.
கேரள மாநிலம் இடுக்கி அணையின் ஒரு பகுதியான செருதோணி அணையில், ஒரு புறம் தண்ணீரும், அதற்கு ஏற்ப மறுபுறம் மேகங்கள் சூழ்ந்தும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.