காசியில் ஓடும் கங்கை ஆற்றின் படித்துறைகளில் ஒன்றான, 'நமோ காட்'டில், 'கும்பிட்ட கை சிலை' உள்ளது. கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த சிலையில் பெரும்பாலான பகுதி நீரில் மூழ்கி உள்ளது. இடம்: காசி, உ.பி.,
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.
சென்னையில் உள்ள அறுபடை வீடு முருகன் கோவிலில் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.இடம் : பெசன்ட் நகர்
திருநெல்வேலி மாவட்டம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழை பெய்துள்ள நிலையில் குப்பக்குறிச்சி பகுதியில் பிசான நெல் சாகுபடிக்காக டிராக்டர் மூலம் து நிலத்தை உழும் விவசாயி.