சிவபெருமானுக்கு உகந்த ஸ்ராவண மாதமான இந்த மாதம் முழுதும், வட மாநிலங்களில் உள்ள பக்தர்கள் தங்களுக்கு அருகில் உள்ள நதியில் இருந்து நீரை சுமந்து சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்வர். நர்மதா நதியில் இருந்து எடுத்த புனித நீரை சுமந்து சென்ற பெண்கள். இடம்: ஜபல்பூர், ம.பி.,
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.
சென்னையில் உள்ள அறுபடை வீடு முருகன் கோவிலில் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.இடம் : பெசன்ட் நகர்