நாடு முழுவதும், நீட் முதுநிலை நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு எழுதச்சென்ற பெண், தேர்வு மையத்திற்கு வெளியே தன் தந்தையிடம் ஆசி பெற்றார். இடம்: கோல்கட்டா, மேற்குவங்கம்
கோடை காலம் என்பதால் ஹிமாச்சலின் குலு மாவட்டத்தில் உள்ள மணாலியில் சுற்றுலா பயணியர் குவிந்து வருகின்றனர். இங்குள்ள பியாஸ் ஆற்றில் ரிவர் ராப்டிங் எனப்படும் சாகச படகு பயணத்தில் ஈடுபட்டுள்ள சுற்றுலா பயணியர்.