விநாயகர் சதுர்த்தி வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மஹாராஷ்டிராவில், இவ்விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக அமைக்கப்படும் வழிபாட்டு பந்தலில் வைக்க, பிரமாண்ட விநாயகர் சிலையை நேற்று ஊர்வலமாக எடுத்துச் சென்ற பக்தர்கள். இடம்: மும்பை
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.