புனித 'ஷ்ரவண' மாதத்தின் கடைசி சோமவாரமான நேற்று ஹரியானாவின் குருகிராமில் உள்ள கோவிலில், சிவனின் வாகனமான நந்தியின் காதுகளில் தன் வேண்டுதலை சொன்ன சிறுமி
சூரியனை வழிபடும் திருவிழா சத் பூஜை என்று வட மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சூரியனின் சக்திக்கும், ஆற்றலுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஏரியில் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இடம்: அகர்தலா, திரிபுரா.
கிழக்கு ஆப்ரிக்க நாடான சீஷெல்சின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேட்ரிக் ஹெர்மினியை, அவரது இல்லத்தில் நம் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மோந்தா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி பாதுகாப்பாக கட்டி வைத்து உள்ளனர். ஆழ்கடல் மீன் பிடி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன.