அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேசிய செயலாளரும், தெலுங்கானா மாநில பொறுப்பாளருமான முன்னாள் எம்பி விஸ்வநாதன், தெலுங்கானா மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சீத்தக்காவுக்கு ராக்கி கயிறு அணிந்து வாழ்த்தினார்.
புதுச்சேரி அரியாங்குப்பம் வட்டார காங்., தலைவர் ஐயப்பன் அக்கட்சியிலிருந்து விலகி என்.ஆர்.,காங்.,ல் சேர்ந்தார். அவர் முதல்வர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசி பெற்றார்.
புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி கடற்கரை சாலையில்அமைக்கப்பட்ட செல்பி பாயிண்ட் முன்பு பொதுமக்கள் செல்பி எடுத்துச் சென்றனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது . இரவு விநாயகர் புறப்பாடு நடந்தது. பக்தர்கள் சூரத் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.