சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள மாநகர பஸ் பணிமனையில் இருந்து, 55 மின்சார 'ஏசி' பஸ்கள் மற்றும் 80 தாழ்தள மின்சார பஸ்களின் சேவையை, துணை முதல்வர் உதயநிதி இன்று துவக்கி வைக்கிறார். அதற்காக, தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்கள்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.