ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் சமஸ்கிருதம், ஹிந்தி மொழியில் பட்டப்படிப்பை முடித்து அசத்தியிருக்கிறார், வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்த 21 வயது ஹசாரிகா. இதன் மூலம் இப்பட்டம் பெற்ற முதல் அசாமியர் என்ற பெருமையை பெற்றார். பல்கலையின் புகழ் பெற்ற ஷெல்டனியன் அரங்கில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற பூரிப்புடன் ஹசாரிகா.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரியமங்கலம் கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், வி.பி.ஜி., ராம்ஜி திட்டத்தின் கீழ் புதிய சமுதாய குளம் அமைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.
திருப்பூரில், பி. எஸ். என் எல் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ படி மாதம் 1000 ரூபாய் திரும்ப வழங்க கோரி, ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் உள்ள அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.