நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அங்கிருந்து பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராகி வருகிறது. இதற்காக எல்லையில் உள்ள, 50 ஆயிரம் மக்களை வெளியேறும்படி கூறியுள்ளது. அதன்படி, மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறும் மக்கள். இடம்: கைபர் பக்துங்க்வா, பாகிஸ்தான்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.