தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் செப் 2ம் தேதி தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இதில் அந்நாட்டின் பாரம்பரிய உடையுடன், துப்பாக்கிகளை கையில் ஏந்தி மிடுக்குடன் நடை போட்ட ராணுவத்தின் மகளிர் பிரிவினர். இடம்: ஹனோய், வியட்நாம்.
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அரங்கில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தெற்காசிய நாடுகளை, ரகாசா என பெயரிட்டுள்ள சூறாவளி நெருங்கி வருகிறது. மிகப்பெரும் பாதிப்பை இது ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது. இதனால் விமான சேவை நிறுத்தப்பட்டதால் விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணியர். இடம்: ஹாங்காய், சீனா.
உத்தரபிரதேசத்தின் மொராதாபாதில் ஆயுதப்படை பிரிவினருக்கான துப்பாக்கி சுடுதல் மற்றும் உடற்தகுதி போட்டிகள் நடந்தன. அதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியதால் மக்கள் படகில் பயணித்தனர்.