சுதந்திர தின விழா விடுமுறையை, இப்படி ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டாடிய பள்ளி மாணவர்கள் படம் எடுப்பது தெரிந்ததும் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டனர். இடம்: வேலூர் சாலை, திருவண்ணாமலை
சென்னையில் உள்ள அறுபடை வீடு முருகன் கோவிலில் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.இடம் : பெசன்ட் நகர்
திருநெல்வேலி மாவட்டம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழை பெய்துள்ள நிலையில் குப்பக்குறிச்சி பகுதியில் பிசான நெல் சாகுபடிக்காக டிராக்டர் மூலம் து நிலத்தை உழும் விவசாயி.
அடையாறு ஆற்றின் முகத்துவாரம் பகுதியில் நீர்வளத்துறை சார்பில் நடந்துவரும் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த அதிக அளவில் பணியில் ஈடுபட்டுள்ள பொக்லைன் இயந்திரங்கள். இடம்: சீனிவாசபுரம்.