கோவை கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர்.
திருப்பூர், குமரன் ரோடு,புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்புப் பெருவிழா முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அன்னை மரியா.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள கங்கை நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், நதிக்கரையோரத்தில் படகுகள் அனைத்தும் அவசர கால பயன்பாட்டுக்கென, ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.