பூந்தமல்லி பைபாஸ்- கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் தடத்தில், போரூரில் இருந்து கோடம்பாக்கம் வரை மெட்ரோ கட்டமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது.இதில் நான்கு கி.மீ தூரத்தில் மேல் மற்றும் கீழ் பகுதிகளிலும் இருவேறு வழித்தடங்களுக்கு மெட்ரோ ரயில் இயக்கும் வகையில், பிரம்மாண்டமாக டபுள் டெக்கர் பாலமும் அமைக்கப்பட்டு வருகிறது.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.