ஸ்ரீ சத்ய சாய்பாபா 110 வது பிறந்த தினம் முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் இருந்து 1500 க்கு மேலான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர். கோசுவாமி மடத்தில் உலக நன்மைக்காக 1500 பக்தர்கள் மகா ருத்ர ஜெபம் பூஜை செய்தனர்.
சூரியனை வழிபடும் திருவிழா சத் பூஜை என்று வட மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சூரியனின் சக்திக்கும், ஆற்றலுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஏரியில் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இடம்: அகர்தலா, திரிபுரா.
கிழக்கு ஆப்ரிக்க நாடான சீஷெல்சின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேட்ரிக் ஹெர்மினியை, அவரது இல்லத்தில் நம் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மோந்தா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி பாதுகாப்பாக கட்டி வைத்து உள்ளனர். ஆழ்கடல் மீன் பிடி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.