தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரும் பொருளாதார நாடாக இந்தோனேஷியா உள்ளது. அங்கு 575 எம்பிக்களுக்கான மாத சம்பவம் 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதை கண்டித்து பார்லிமென்டை நோக்கி பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர். இடம்: ஜகார்த்தா, இந்தோனேஷியா.
திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில் 67-ம் ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு பகவான் ஸ்ரீராமரின் விசேஷ குணங்கள் என்ற தலைப்பில் ஸ்ரீராஜாராமன் சொற்பொழிவாற்றினார்.
பச்சை மலையரசியின் மடியில் வெள்ளை மேகங்கள் தவழ்ந்து, உரையாடி முத்தமிட்டுச் செல்லும் இயற்கையின் காதல் காவியமாக மலையைத் தழுவும் மேகங்களின் அழகு பரவசப்படுத்துகிறது. இடம்: கோத்தகிரி, நீலகிரி.
எவ்வளவு வறுமை வாட்டியிருந்தால், லாரியில் கொண்டு செல்ல வேண்டிய சுமையை முகமே தெரியாத அளவுக்கு இப்படி தலைச்சுமையாக கொண்டு சென்றிருப்பார் இந்த பெண். இடம்: கோவை உக்கடம்.