இவர் விதை விநாயகர்.! கரைத்தாலும் கானகமாக வருவார்.! கோவை கல்லூரி மாணவர்கள் களிமண் மூலம் விதைகளை உள்ளே வைத்து உருவாக்கிய விநாயகர் பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இடம்: சவுரிபாளையம், கோவை
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.