கிழக்காசிய நாடான ஜப்பானின் யோகஹாமாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சட்டவிரோதமாக இயந்திரங்களை ஏற்றுமதி செய்ததாக, 2021ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அந்த நிறுவனத்தின் மூன்று உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இதில், ஷிசுவோ அய்ஷிமா, 72, புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஜாமின் மற்றும் உரிய சிகிச்சை கிடைக்காததால், 2022ல், அவர் உயிரிழந்தார். உயிரிழந்ததற்கு யோகஹாமா போலீஸ் உயரதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம், 74 (முழு கொள்ளவு 120 அடி)அடியாக குறைந்ததால், சேத்துக்குழி நீர்பரப்பு பகுதியில் மூழ்கியிருந்த, புனித சவேரியார் ஆலய கோபுர முகப்பு, 6 அடி அளவில், நீருக்கு வெளியே தெரிந்தது
அசாம் மாநிலம் கோலாகாட்டில் உள்ள காசிரங்கா புலிகள் காப்பகம் பருவமழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் பின் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக நேற்று முதல் திறக்கப்பட்டது.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க.,செயலாளர் டாக்டர் லட்சுமணன் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு விழுப்புரம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் டி.கே.பி.ரமேஷ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.