'தலை கவசம் உயிர் கவசம்' போன்ற பல்வேறு வாசகங்களை கடந்து, சாலையில் கவனத்தை ஈர்க்கும் வகையில், மண்டை ஓடு படம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலாவது வாகன ஓட்டிகள் 'ஹெல்மெட்' அணிவதன் அவசியத்தை புரிந்து கொள்வர் என, போக்குவரத்து, நெடுஞ்சாலை துறைகள் நினைக்கின்றன. ஆனாலும், ஒரு சில வாகன ஓட்டிகள் எதையும் கண்டுகொள்வதாக இல்லை. இடம்: தஞ்சாவூர் பெரிய கோவில் பகுதி மேம்பாலம்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.