ரஷ்யா நடத்தி வரும் போர் மூன்றரை ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாநகராட்சி வளாகத்தின் அடித்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறையில் படிக்கும் மாணவர்கள். இடம்: பாப்ரிக், உக்ரைன்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.