இந்த ரோட்டை, ஏதோ புறநகர் சந்து ரோடு என நினைத்து விட வேண்டாம். கோவை மாநகரின் மத்தியில் உள்ள ஆடீஸ் வீதிதான் இப்படி அலங்கோலமாக கிடக்கிறது. வாகன ஓட்டிகள் தினமும் நொந்து போகின்றனர். ரோடு போட அரசு ஒதுக்கும் நிதி எங்கே தான் போகிறது?
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.