திருப்பூர் கருவம்பாளையம் ராஜவாய்க்கால் வீதியில் உள்ள பார்மா கம்பெனி ஜெனரேட்டரில் தீ பிடித்து, அருகில் இருந்த பனியன் நிறுவனத்திலும் தீ பிடித்தது. ஜெனரேட்டரை பாதுகாப்பாக வெளியேற்றிய தீயணைப்பு துறையினர்.
'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின், 118வது பிறந்த நாளையொட்டி, இன்று( அக்டோபர் 02) அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவரது பேரனும், ' தினமலர் ' ஆசிரியருமான டாக்டர் கி.ராமசுப்பு. இடம்: ' தினமலர்' தலைமை அலுவலகம், ராயப்பேட்டை, சென்னை.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து ரோடு ஷோ நடத்திய முதல்வர் விஜய், ராமாபுரம் கிராமத்திற்கு சென்ற போது சிறிது நேரம் டிராக்டர் ஓட்டினார்.
ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெனற தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டுதுறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வாழ்த்து தெரிவித்தார். பதக்கம் வென்றவர்களுக்கு 6.50 கோடி ரூபாய் ஊக்கத்தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இடம்: நேரு உள்விளையாட்டு அரரங்கம், சென்னை.
மஹாத்மா காந்தியின் 157 வது பிறந்த நாள் இன்று ( அக்.,02) கொண்டாடப்பட்டது. தெலுங்கானா தலைநகர் ஐ தராபாத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பெண்கள்.
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து, நடந்த பொதுக்கூட்டத்தில் ஓட்டு சேகரித்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின். அருகில் வேட்பாளர் சுகன்யா. இடம்: உடுமலை ரோடு.